ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவின் மகள் மிசா பாரதி. இவர் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்து வருகிறார். இந்நிலையில், மிசா பாரதியும் அவரது கணவர் சைலேஷ்குமாரும் ஏராளமான அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் மூலம் பணப்பரிமாற்ற மோசடியில் ஈடுபட்டதாக மத்தியில் ஆளும் மோடி அரசு வழக்கு பதிவு செய்தது. மிசா பாரதி ரூ. 8 ஆயிரம் கோடி அளவுக்கு பண பரிமாற்ற மோசடி செய்திருப்பதாகவும் குற்றம் சாட்டியது.
இதுதொடர்பான வழக்கில் தில்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அமலாக்க துறை ஏற்கெனவே சம்மன் அனுப்பி இருந்தது. அதனடிப்படையில், மிசா பாரதியும், அவரது கணவரும் சனிக்கிழமையன்று பாட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜராகினர்.