Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

லண்டனில் காதலிக்கு இலங்கையர் செய்த காரியம்

March 11, 2018
in News, Politics, Uncategorized, World
0

லண்டன், மன்செஸ்டர் பகுதியைச் சேர்ந்த இலங்கை இளைஞன் ஒருவர் தனது காதலியை மிக மோசமான பாலியல் சித்திரவதைகளுக்குள்ளாக்கி வன்புணர்ந்த குற்றச் சாட்டில் சிக்கியுள்ளார்.

இந்த குற்றத்திற்காக 12 வருட சிறைத்தண்டனையை எதிர்நோக்கியுள்ள அதே வேளை தண்டனைக் காலம் முடிந்த பின்னர் நாடுகடத்தப்படவும் உள்ளார்.

இவர் ஒருவித ஆளுமை கோளாறால் மனநிலை பாதிக்கப்பட்டவர் என வைத்திய அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

25 வயதான இவரது பெயர் அகம்போதி டி சொய்சா என்பதாகும்.

மன்செஸ்டர் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவரான இவர் வடக்கு லண்டனை வதிவிடமாகக் கொண்டவர். லண்டன் மன்செஸ்டர் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டல் அறையில் வைத்து தனது காதலியை பாலியல் ரீதியாக மிக மோசமாக சித்திரவதைப்படுத்திய இவர் இரத்தம் வரும் வரை தாக்கியுள்ளார்.

அவரை நிர்வாணமாக நிற்கும் படி வற்புறுத்திய அவர் மயக்கமுறும் வரை தாக்கிய பின்னர் காதலியை தனது கையடக்கத்தொலைபேசியில் ஒளிப்பதிவும் செய்துள்ளார். அதன் பின்னர் இவர் நித்திரைக்கு சென்று விட்டதால் ஹோட்டல் அறையிலிருந்து தப்பித்த அவரது காதலி இது குறித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

பல்வேறு சந்தர்ப்பங்களில் சுமார் நான்கு தடவை இவர் தனது காதலியை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

மன்செஸ்டர் நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்ட பெண் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் டி.சொய்சா தான் ஒரு கோடீஸ்வரர் என்று காட்டிக்கொண்டதோடு பல பொய்களை கூறியுள்ளதாக தெரியவந்துள்ளது.

ஹோட்டல் அறையில் வைத்து பாதிக்கப்பட்ட பெண்ணை அச்சுறுத்தும் வகையில் தான் 37 கொலைகளை செய்த தொடர் கொலையாளி என்றும், லண்டன் பாதுகாப்பு சேவைப் பிரிவின் காவலர்கள் தன்னை சுற்றி எப்போதும் இருப்பர் என்றும் பெருமையடித்துள்ளார்.

தனது முதல் சந்திப்பின் போது காதலிக்கும் அவரது தோழிகளுக்கும் பரிசுப்பொருட்களை வாரி வழங்கிய டிசொய்சா தனது தந்தை ஒரு எண்ணெய் நிறுவனத்தின் உரிமையாளர் என்றும் லண்டன், அமெரிக்காவின் லொஸ்ஏஞ்சல்ஸ் ஆகிய நகரங்களில் தனக்கு பெறுமதியான சொத்துக்கள் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

இச்சம்பவத்தை விசாரித்த மன்செஸ்டர் நீதிமன்ற நீதவான் மார்ட்டின் ருட்லாண்ட், டி. சொய்சாவைப்பற்றி கூறும் போது இவர் தனது காதலிடம் உணர்ச்சிகரமாக மிரட்டல் விடுத்து காரியத்தை சாதித்துக்கொண்டார் என்றும், அவரது குடும்பத்தினருக்கு அவர் மீது வெறுப்பு உருவாவதற்காக ஒரு தடவை காதலியின் கையடக்கத்தொலைபேசியிலிருந்து அவரது மாமிக்கு தகாத வசனங்களுடன் குறுந்தகவலை அனுப்பியுள்ளார் என்றும் தெரிவிக்கிறார்.

பாலியல் துஷ்பிரயோகம், மற்றும் சித்திரவதை, உடலுக்கு தீங்கு விளைவிக்கும் செயற்பாடுகள், சேதம் விளைவித்தமை உட்பட முந்தைய குற்றங்களுக்கும் சேர்த்து இவருக்கு 12 வருட சிறைத்தண்டனையும் ஒத்தி வைக்கப்பட்ட மேலதிக 5 வருட சிறைத்தண்டனையும் வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. மேலும் அவரது மனநிலை தொடர்பான வைத்திய அறிக்கைகளும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

டிசொய்சா செய்த குற்றங்களின் தீவிரத் தன்மையின் அடிப்படையில் சிறைத் தண்டனைக்குப்பின்னர் அவர் தானாகவே இலங்கைக்கு நாடு கடத்தப்படு வார் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post

நிலாவெளி பெரிய குளத்தில் படகு கவிழ்ந்ததில் ஐவர் பலி

Next Post

என் தந்தையை கொன்றவர்களை மன்னித்து விட்டோம் : ராகுல்

Next Post

என் தந்தையை கொன்றவர்களை மன்னித்து விட்டோம் : ராகுல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures