Sunday, August 24, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

லசந்தவை நினைவுகூருவதுடன் வடக்கு, கிழக்கில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களையும் நினைவுகூருவோம் | ரெய்சா விக்கிரமதுங்க

January 9, 2024
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
லசந்தவை நினைவுகூருவதுடன் வடக்கு, கிழக்கில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களையும் நினைவுகூருவோம் | ரெய்சா விக்கிரமதுங்க

இனவெறி, அதிகார வெறி ஊழல் அரசியல்வாதிகளுக்கு  வாக்களிப்பதை தவிர்ப்போம் என வேண்டுகோள் விடுத்துள்ள ரெய்சா  விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்டஊடகவியலாளர் லசந்தவிக்கிரமதுங்கவை மாத்திரமல்லாமல்  அடிக்கடி பெயர்கள் மறக்கப்படும் வடக்கு கிழக்கை சேர்ந்த கொல்லப்பட்ட பத்திரிகையாளர்களை நினைவுகூருவோம் என வேண்டுகோள் விடுத்துள்ளார்

டுவிட்டர் பதிவில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியுள்ளதாவது :

பாலஸ்தீனம், சூடான், கொங்கோ, யேமன்  மற்றும்  தாய்நாட்டுக்கு அருகில் பலோச்சிஸ்தான்  ஆப்கானிஸ்தான் மியன்மாரிலிருந்து நாளாந்தம் மரணங்கள், காணாமல் போதல், காயங்கள், பசிபட்டினி குறித்து இருள்மயமான தகவல்கள் வெளியாகின்றன.

இலங்கையர்களுக்கு  இந்த காட்சிகள் பழக்கமானவை. நாங்கள் யுத்தத்தை அனுபவித்த நாட்டை சேர்ந்தவர்கள்

லசந்தவின் மரணம் யுத்தத்தினால் ஏற்பட்ட இழப்புகளில் ஒன்று என ஏற்றுக்கொள்ளப்படவில்லை . 

ஆனால் அவரது மகள் சுட்டிக்காட்டியுள்ளதுபோல கொல்லப்படுவதற்கு முன்னர் எனது அங்கிள் போர் சாதனமொன்று குறித்த செய்திகளை வெளியிட்டு வந்தார்.கசப்பான உண்மைகளை வெளியிட்டு வந்தார்.

இலங்கையர்களான எங்களுக்கு  மறப்பதே தேசப்பற்று என சொல்லப்பட்டுவந்துள்ளது, அதாவது இறுதிக்கட்ட போரின்போது இழக்கப்பட்ட உயிர்கள் பெரும் வெற்றிக்காக செலுத்தப்படவேண்டிய சிறிய விலை என  எங்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

இன்று நாங்கள் உலகம் எங்கிலும் மக்கள் அமைதி சமாதானத்திற்காக பேரணியாக செல்வதை பார்க்கின்றோம்,அவர்கள் காசாவில் இஸ்ரேலின் தாக்குதலில் கொல்லப்பட்ட பாலஸ்தீன சிறுவர்களின் பெயர்களை வாசிக்கின்றனர். கொங்கோவிற்காக நிதி திரட்டுகின்றனர்,டார்பூரில் இடம்பெறும் பாலியல் வன்முறைகளுக்கு எதிராக குரல் எழுப்புகின்றனர்.

இந்த தருணத்தில் இளம் செயற்பாட்டாளர்கள் ஆச்சரியம் ஏற்படுத்தும் தார்மீக தெளிவை, முன்னோக்கி அணிவகுத்து செல்வதற்கு தாங்கள் தயார் என்பதை மாத்திரம் வெளிப்படுத்தவில்லை.மாறாக பகிஷ்கரிப்பு, புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கும் தங்களை பிரதிநிதித்துவம் செய்பவர்களை நோக்கி வேண்டுகோள்களை விடுப்பதற்கும் உலகில் இடம்பெறும் வன்முறைகளுக்குப் பின்னால் உள்ள காரணங்களை அறிவதற்கும் தாங்கள் தயார் என்பதை அவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்

லசந்த விக்கிரமதுங்கவை நினைவுகூருவதற்காக நாங்கள் அணிதிரண்டுள்ள இந்த தருணத்தில் இது குறித்து சிந்திப்பது பொருத்தமானது என நான் கருதுகின்றேன்.

அதிகாரம் குறித்து அதிகம் சிந்தித்த ,ஊழல் அரசியல்வாதிகளையும் வர்த்தகர்களையும்  அம்பலப்படுத்த முயன்றமைக்காக  பெரும் விலையை செலுத்திய அவர் தற்போது எங்கள் மத்தியில் இல்லை என்றாலும் அவர் பணியாற்றிய அனைத்து ஆசிரிய பீடங்களையும் கடந்து சென்ற அனைத்துபத்திரிகையாளர்களிடமும் அவரது பாரம்பரியம் உயிர் வாழ்கிறது.

அவர்களில் பலர் தொடர்ந்தும் ஊடகங்களில் பணியாற்றுவதுடன் தங்கள்அறிவை இளம் தலைமுறையினரிடம் பகிர்ந்துகொள்கின்றனர்.

இன்று  உலகில் மாத்திரமல்ல இலங்கையிலும் ஈவிரக்கமற்ற சூழல் நிலவும் காலம்.

விலைகள் விண்ணை தொடுகின்றன- வரிகள் நாளாந்தம் அதிகரிக்கின்றன 

ஆர்ப்பாட்டக்காரர்கள் கடந்த ஒரு வருடகாலத்திற்கு மேல் வேண்டுகோள் விடுக்கின்ற போதிலும் தொடர்ந்து வந்த ஆட்சியாளர்கள்  நேர்மையான மாற்றத்திற்கான விருப்பத்தை வெளிப்படுத்தவில்லை.

மறப்பதே தேசப்பற்று என மீண்டும் அவர்கள் எங்களிற்கு தெரிவிக்கின்றனர்.

பலர் அதனை ஏற்க தயாராக உள்ளனர் குறிப்பாக கொழும்பில்.

மாறாக ஒரு ஓரமாக  நின்றுகொண்டு கைகளை உயர்த்துவதற்கு பதில் நாங்கள் மறப்பதற்கு பதில் நினைவுகூருவதற்கு  திடசங்கற்பம் பூணுவோம் என நான் முன்மொழிகின்றேன்.

லசந்த விக்கிரமதுங்கவை அவரது நகைச்சுவை உணர்வு அவரது இரக்க குணம் ஒரு செய்திக்காக அவர் தொடர்ந்து முயற்சித்தல் போன்றவற்றை மாத்திரம் நினை கூருவதுடன் மாத்திரமல்லாமல் அவரை போன்ற அச்சமில்லாத தங்கள் உயிர்களை இழந்த ஊடகவியலாளர்கள் ஊடகப்பணியாளர்களை நினைவில்வைத்திருப்போம்.குறிப்பாக அடிக்கடி பெயர்கள் மறக்கப்படும் வடக்குகிழக்கை சேர்ந்த பத்திரிகையாளர்களை நினைவு கூருவோம்.

தேர்தல் என வரும்போது எங்கள் வாக்கை செலுத்தும் தருணம் வரும்போது நாங்கள் மனச்சாட்சியின் அடிப்படையில் வாக்களிப்போம் – இனவெறியர்களை ஊழல் அதிகார வெறிமிகுந்த அரசியல்வாதிகளை தவிர்ப்போம்.

எனது அங்கிள் தற்போதுஇருந்தால் அவர் தீவிரமாக செயற்படுவார் மக்களை சரியான தெரிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளும் கடுமையான தலையங்கங்களை எழுதுவார்.

ஆகவேநாம்  சரியான தெரிவுகளை மேற்கொள்வோம்.

நினைவுகூருவோம் தொடர்ந்தும் எதிர்ப்போம்

Previous Post

வரிக்கோப்பு இலக்கம் பெப்ரவரி முதல் அமுலுக்கு வருகிறது | நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய

Next Post

ஜனாதிபதி ரணிலின் தனிப்பட்ட இல்லம் அமைந்துள்ள கொள்ளுப்பிட்டி 5ஆவது வீதியின் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை?

Next Post
ஜனாதிபதி ரணிலின் தனிப்பட்ட இல்லம் அமைந்துள்ள கொள்ளுப்பிட்டி 5ஆவது வீதியின் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை?

ஜனாதிபதி ரணிலின் தனிப்பட்ட இல்லம் அமைந்துள்ள கொள்ளுப்பிட்டி 5ஆவது வீதியின் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures