தமிழ், சிங்கள புத்தாண்டு காலத்தில் லக் சதொச நிறுவனம் 400 கோடி ரூபா வருமானத்தை ஈட்டியுள்ளதாக வணிக, கைத்தொழில் அமைச்சின் பணிப்பாளர் திருமதி இந்திக்கா ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இது புத்தாண்டு பண்டிகைக் காலத்தில் நிறுவனம் ஈட்டிய ஆகக் கூடுதலான வருமானம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழ், சிங்கள புத்தாண்டு காலத்தில் சதொச கிளைகள் மூலம் 40 சதவீத விலைக்கழிவு வழங்கப்பட்டது. இது வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்க வழி வகுத்தது.
பண்டிகைக் காலத்தில் சதொச விற்பனை கிளைகள் முழுமையாக கூடுதலான நேரம் திறந்து வைக்கப்பட்டதாகவும் இன்று வரை வாடிக்கையாளர்களிடம் இருந்து எதுவித முறைப்பாடும் கிடைக்கவில்லை எனவும் திருமதி இந்திக்கா ரணதுங்க மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.