ரொறொன்ரோவில் சனக்கூட்டத்தில் பெப்பர்-ஸ்பிரே !

ரொறொன்ரோவில் சனக்கூட்டத்தில் பெப்பர்-ஸ்பிரே !

ரொறொன்ரோ-யங் மற்றும் டன்டாஸ் சதுக்கத்தில் வெள்ளிக்கிழமை இரவு சனக்கூட்டத்தில் பெப்பர்-ஸ்பிரே செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை இரவு 10மணியளவில் வீடுகள், சினிமா தியேட்டர்கள், உணவகங்கள் மற்றும் கடைகள் நிறைந்த பகுதியில் இச்சம்பவம் நடந்துள்ளது.
அப்பகுதியில் ஏற்பட்ட சண்டை ஒன்றை தொடர்ந்து அதிக அளவிலான சனக்கூட்டத்திற்குள் குழு ஒன்று ஸ்பிரே பண்ணியுள்ளது.
இரவு 10மணிக்கு சிறிது பின்னர் பொலிசாரை அழைத்த ஒருவர் 30-40வரையிலான மக்கள் மீது பெப்பர் தெளிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.சதுக்கத்தின் வடகிழக்கு மூலையில் நகரின் சுறுசுறுப்பான குறுக்கீட்டு சந்திப்பில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தாக்கியவன் சட்ட விரோதமான ஒரு பெரிய ஸ்பிரேயை பாவித்துள்ளதாக ரொறொன்ரோ பொலிஸ் கான்ஸ்டபிள் டேவிட் ஹொப்கின்சன் தெரிவித்துள்ளார்.
சம்பவ இடத்திலிருநது இரண்டு சந்தேக நபர்கள் ஓடிவிட்டதாக தாங்கள் நம்புவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
sprayspray1spray2spray3

Next Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *