Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ரொறன்ரோ- யாழ். நகர முதல்வர்கள் சந்திப்பு

September 1, 2018
in News, Politics, World
0

யாழ். மாநகர முதல்வர் இமானுவேல் ஆனல்ட் அவர்களுக்கும் ரொறன்ரோ நகர முதல்வர் ரோரி அவர்களுக்கும் இடையே மரியாதை நிமித்தமான சந்திப்பு ஒன்று கடந்த 28 ஆம் திகதி ரொறன்ரோ நகர மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்த சந்திப்பில் ரொறன்ரோ மாநகர சபை உறுப்பினர் நீதன் சாண் அவர்கள், கனேடிய தமிழர் பேரவையின் நிறைவேற்று இயக்குநர் டான்ரன் துரைராசா மற்றும் கனேடிய தமிழர் பேரவையின் வடக்கு கிழக்கு மேம்பாட்டு திட்டத்தின் பொறுப்பாளர் பிரசாந்த் ஸ்ரீசந்திரமோகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

முதல்வர் ஆனல்ட் அவர்கள் யாழ்ப்பாண மாநகரத்தில் அண்மைக் காலத்தில் இடம் பெறும் மீள்கட்டுமான முயற்சிகள் பற்றி முதல்வர் ரோறி அவர்களுக்கு விளக்கியதுடன் நீண்ட போருக்குப் பின்னர் மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு சவால்கள் தொடர்பாகவும் கலந்துரையாடியிருந்தார். அறிவுப் பரிமாற்றம், கழிவு
முகாமைத்துவம் மற்றும் பயிற்சி வசதிகள் தொடர்பாக முதல்வர் ரோறியின் உதவியை முதல்வர் ஆனல்ட் அவர்கள் கோரியிருந்தார்.

முதல்வர் ரோறி அவர்கள் அண்மையில் யாழ்ப்பாணம் மற்றும் வடக்கு மாகாணத்துக்குச் வந்ததைப் பற்றி எடுத்துரைத்ததுடன் நீண்ட போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசத்தை மீள்கட்டியெழுப்ப உதவும் தனது ஈடுபாட்டை வெளிப்படுத்தியிருந்தார். ரொறன்ரோ நகரம் என்னென்ன வழிகளில் யாழ்ப்பாண நகரத்துக்கு
உதவ முடியும் என்பதையிட்டுக் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.

யாழ்ப்பாண மாநகரத்தின் பொருளாதார மேம்பாட்டுக்காக எதிர்காலத்தில் ரொறன்ரோ நகரம் யாழ் மாநகருடன் இணைந்து செயல்படுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வதற்கான நம்பிக்கையை வெளியிட்டதுடன் ரொறன்ரோ நகரம் யாழ்ப்பாணம் நகரம் இரண்டுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவது பற்றிய கருத்துப்பரிமாற்றங்களும் இடம் பெற்றன.

யாழ்ப்பாண நகர முதல்வர் ஆனல்ட், ரொறன்ரோ நகர முதல்வர் ரோறி அவர்களுக்கு யாழ்ப்பாணத்துக்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்ததுடன் ரொறன்ரோ நகர மண்டபத்தில் உள்ள விருந்தினர் புத்தகத்தில் கையொப்பமிட்டார்.

யாழ். மாநகர முதல்வர் அவர்களினால் யாழ்ப்பாணம் மற்றும் இலங்கையின் ஏனைய பகுதிகளில் வனையப்பட்ட கைவினைப் பொருட்கள் அடங்கிய பரிசுப் பொதி ஒன்று முதல்வர் ரோறிக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது. முதல்வர் ரோறி அவர்களினால் யாழ். மாநகர முதல்வருக்கு ரொறன்ரோ நகரம் பற்றிய நூல் ஒன்று பரிசாக வழங்கப்பட்டது.

Previous Post

புத்தளம் அம்மன் கோவிலில் திருட்டு

Next Post

விவசாயிகளுக்கு 12 கோடியே 90 இலட்சம் ரூபாய் காப்புறுதி

Next Post

விவசாயிகளுக்கு 12 கோடியே 90 இலட்சம் ரூபாய் காப்புறுதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures