ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிறப்பு அரசியல் சபைக் கூட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெறவுள்ளது.
இந்த கூட்டத்தின்போது அனைத்து மாவட்டங்களிலும் தனித்தனியாக போட்டியிடுவதா அல்லது கூட்டணியுடன் இணைந்து தேர்தலில் களமிறங்குவதா என்பது தொடர்பாக இறுதி தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்று இடம்பெற்ற அரசியல் சபைக் கூட்டத்தில் இன்றைய தினம் தீர்மானம் மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, யாழ்ப்பாணம், நுவரெலியா, வன்னி மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில் தனித்து போட்டியிடவுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர நேற்றைய தினம் தெரிவித்திருந்தார்.
மேலும் இன்றைய தினம் இது தொடர்பாக ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் கலந்துரையாடி தீர்மானமொன்றை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

