Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ரில்வினுக்கு இந்தியா இதற்காக அழுத்தம் கொடுக்கும் – ரணில் தரப்பு உறுதி

February 11, 2026
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
லண்டனில் ரில்வின் சில்வாவுக்கு எதிர்ப்பு : உற்றுநோக்கும் இலங்கை சிஐடி!

மாகாண சபைத் தேர்தலை அநுர அரசு நடத்தும் என எதிர்பார்க்கின்றோம். அதற்கான அழுத்தத்தை ரில்வின் சில்வா உள்ளிட்டவர்களுக்கு இந்தியா கொடுக்கும் என நம்புகின்றோம் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு அநுர அரச தரப்பினர் பின்வாங்கி வருகின்றமை தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், “மாகாண சபைத் தேர்தலை இந்த வருடம் நடத்துவதாகவே அநுர அரசு தெரிவித்திருந்தது.

வரவு – செலவு திட்டம்

அத்துடன் வரவு – செலவு திட்டத்திலும் அதற்காக நிதி ஒதுக்கப்பட்டிருக்கின்றது. அதனால் மாகாண சபைத் தேர்தலை அரசு நடத்தும் என்ற நம்பிக்கையிலேயே நாங்கள் இருக்கின்றோம்.

ரில்வினுக்கு இந்தியா இதற்காக அழுத்தம் கொடுக்கும் - ரணில் தரப்பு உறுதி | Jvp Tilvin Silva And Delegation Visit To India

எனினும், டித்வா புயல் அனர்த்தத்துடன் தற்போதைய நிலையில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான அரசின் முயற்சி குறைந்துள்ளதாகவே தெரிகின்றது.

ஆனால் தற்போது மக்கள் விடுதல முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா உள்ளிட்ட சிலர் இந்தியாவுக்குச் சென்றிருக்கின்றனர்.

மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு இந்தியா ரில்வின் சில்வாவுக்கு ஓரளவு அழுத்தம் கொடுக்கும் என நினைக்கின்றோம். அதனால் மாகாண சபைத் தேர்தலை நடத்தினால் நாட்டின் உண்மைத்தன்மையை மக்களுக்குக் காட்ட முடியுமாகும்.

கூட்டணி அமைத்தே போட்டியிடுவோம்

மேலும் மாகாண சபைத் தேர்தல் இடம்பெறுமாக இருந்தால், நாங்கள் கூட்டணி அமைத்தே போட்டியிடுவோம். எதிர்க்கட்சியில் இருக்கும் அனைத்து கட்சிகளுக்கும் ஐக்கிய தேசியக் கட்சி ஒரு பாலமாகவே இருக்கின்றது.

அதனால் கூட்டணி அமைப்பது தொடர்பில் தற்போது நாங்கள் அனைவருடனும் கலந்துரையாடி வருகின்றாேம். ஐக்கிய மக்கள் சக்தியுடன் கலந்துரையாட எமது கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்த்தன தலைமையில் குழுவொன்றை ரணில் விக்கிரமசிங்க அமைத்திருக்கின்றார்.

ரில்வினுக்கு இந்தியா இதற்காக அழுத்தம் கொடுக்கும் - ரணில் தரப்பு உறுதி | Jvp Tilvin Silva And Delegation Visit To India

அதேபோன்று ஏனைய கட்சிகளுடன் கலந்துரையாட என்னை நியமித்திருக்கின்றார். அதனால் நாங்கள் அனைத்து கட்சிகளுடன் கலந்துரையாடி வருகின்றோம்.

இறுதியில் சிறந்தததொரு எதிர்க்கட்சியை அமைப்பதை யாராலும் தடுக்க முடியாது. அத்துடன் கூட்டணி அமைக்கும் விடயத்தில்.

எதிர்கால அரசியல் நடவடிக்கைகளைக் கருத்தில்கொண்டு நாங்கள் முதலாவதாக இணைந்து செயற்பட முயற்சிப்பது ஐக்கிய மக்கள் சக்தியுடனாகும். அதனைத் தொடர்ந்து ஏனைய எதிர்க்கட்சிகளுடன் இணைந்து செயற்பட நாங்கள் தயாராக இருக்கின்றாேம்.” – என்றார்.

Previous Post

தமிழரசு கட்சியில் மீளவும் அனந்தி..! தாயக அரசியல் திரைமறைவில் அதிர்ச்சி சம்பவங்கள்

Next Post

வடக்கு இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புக்கள் : ஆளுநர் விடுத்துள்ள கோரிக்கை

Next Post
எதிர்கால தலைமுறையை உருவாக்குபவர்கள் அதிபர்கள் | வடக்கு மாகாண ஆளுநர்

வடக்கு இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புக்கள் : ஆளுநர் விடுத்துள்ள கோரிக்கை

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures