Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ரிசாத் உள்ளிட்டோருக்கு எதிரான, வழக்கின் விசாரணைகள் நாளை

February 18, 2020
in News, Politics, World
0

வில்­பத்து தேசிய வன பிர­தே­சத்தில் அதி­பா­து­காப்­புக்­குட்­பட்ட ஆயி­ரக்­க­ணக்­கான ஏக்கர் காணியை துப்­பு­ரவு செய்து மீள்­கு­டி­யேற்றம் மற்றும் சட்­ட­வி­ரோத நிர்­மா­ணங்கள் செய்­துள்­ள­தாகத் தெரி­வித்து முன்னாள் அமைச்சர் ரிசாத் பதி­யுதீன் உட்­பட சம்­பந்­தப்­பட்ட நபர்­க­ளுக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு அதி­கா­ரி­க­ளுக்கு உத்­த­ர­வி­டு­மாறு கோரி சூழல் நீதிக்­கான மையம் தாக்கல் செய்­துள்ள வழக்கின் மேல­திக விசா­ரணை நாளை 19 மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்றில் இடம்­பெ­ற­வுள்­ளது.

சூழல் நீதிக்­கான மையம் தாக்கல் செய்­துள்ள இந்த ரிட் மனுவில் பிர­தி­வா­தி­க­ளாக வன­சீ­வ­ரா­சிகள் பணிப்­பாளர் நாயகம், மத்­திய சூழல் அதி­கா­ர­சபை, மன்னார் மாவட்ட செய­லாளர், முன்னாள் அமைச்சர் ரிசஷாத் பதி­யுதீன் மற்றும் சட்­டமா அதிபர் உட்­பட 9 பேர் பெயர் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளார்கள்.

தேசிய சூழல் பாது­காப்பு சட்­டத்தை மீறி வில்­பத்து வன­பா­து­காப்பு பிர­தே­சத்தில் மேற்­கொள்­ளப்­பட்­டுள்ள காடுகள் அழிப்­பினால் அங்கு பாரிய பாதிப்­புகள் ஏற்­பட்­டுள்­ள­தாக மனு­தா­ரர்கள் தமது மனுவில் குறிப்­பிட்­டுள்­ளனர்.

இந்த மனு விசா­ரிக்­கப்­பட்டு முடி­வ­டைந்த பின்னர் தீர்ப்பு வழங்­கு­வ­தற்கு திகதி குறிப்­பி­டப்­பட்­டி­ருந்த நிலையில் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் நீதி­பதி மஹிந்த சம­ய­வர்­தன தீர்ப்பு வழங்­கு­வ­தற்கு தான் விரும்­ப­வில்லை என மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்றின் தலைவர் யசந்த கோதா­கொ­ட­வுக்கு அறி­வித்தார். இத­னை­ய­டுத்தே இவ்­வ­ழக்­கினை மீண்டும் ஆரம்­பத்­தி­லி­ருந்தே வேறு நீதி­ப­திகள் குழாம் முன்­னி­லையில் விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­வ­தற்கு மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்றின் தலைவர் தீர்­மா­னித்தார்.

தாக்கல் செய்­யப்­பட்­டுள்ள மனுவில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, ‘இலங்­கையின் தேசிய வனங்­களில் ஒன்­றான வில்­பத்து தேசிய வன­பா­து­காப்பு பகு­திக்கு சொந்­த­மான ஆயி­ரக்­க­ணக்­கான ஏக்கர் நிலம் துப்­ப­ுரவு செய்­யப்­பட்டு சட்­ட­வி­ரோ­த­மாக மக்கள் குடி­யேற்­றப்­பட்­டுள்­ளார்கள்.

பிர­தி­வா­தி­யான அமைச்சர் ரிஷாத் பதி­யு­தீனின் தலை­யீட்­டினால் இடம்­பெற்­றுள்ள இந்த மீள்­கு­டி­யேற்­றத்தில் 1500 குடும்­பங்கள் அங்கு குடி­ய­மர்த்­தப்­பட்­டுள்­ள­தாக மனுவில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இந்த மீள்­கு­டி­யேற்றம் மூலம் தேசிய சூழ­லியல் சட்டம் மீறப்­பட்­டுள்­ளது. வரண்ட வல­யத்­துக்­குட்­பட்ட இந்த நிலம் மக்கள் வாழ்­வ­தற்கு உகந்­த­தல்ல. சூழ­லியல் சட்டம் மற்றும் நடை­மு­றை­க­ளி­லுள்ள சட்­டத்­துக்கு மாறாக மேற்கொள்ளப்பட்டுள்ள காடுகள் அழிப்பு, மீள் குடியேற்றம் மற்றும் சட்டவிரோத நிர்மாணங்கள் மேற்கொண்டுள்ள நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடும்படி மனுதாரர்கள் மேன்முறையீட்டு நீதிமன்றினைக் கோரியுள்ளார்கள்.

Previous Post

சூடானுடன் புத்துயிர் பெறும் இஸ்ரேலின் உறவு

Next Post

வீட்டுத் திட்டங்களை விரைவாக வழங்குமாறு அதிகாரிகளுக்கு பிரதமர் மஹிந்த பணிப்பு!

Next Post

வீட்டுத் திட்டங்களை விரைவாக வழங்குமாறு அதிகாரிகளுக்கு பிரதமர் மஹிந்த பணிப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures