முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன கொழும்பு மேல் நீதிமன்றில் இன்று ஆஜராகியுள்ளார்.
முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்னவிற்கு கொழும்பு பிரதான நீதவானால் வழங்கப்பட்ட பிணை உத்தரவுக்கு எதிராக மீள் பரிசீலனை மனு ஒன்று சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
குறித்த மீள் பரிசீலனை மனு விசாரணைக்காகவே முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தற்போது கொழும்பு மேல் நீதிமன்றில் ஆஜராகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

