ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸவின் இரட்டைப் பிரஜாவுரிமை தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணி மீண்டும் நீதிமன்றத்தை நாட தயாராவதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறிய கருத்தை மக்கள் விடுதலை முன்னணி முற்றாக மறுத்துள்ளது.
அமைச்சர் ராஜித சேனாரத்ன கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றின் போது இதனைக் கூறியிருந்தார்.
விசேட ஊடக அறிவிக் ஒன்றின் மூலம் அமைச்சரின் இக்கூற்றை மக்கள் விடுதலை முன்னணி மறுத்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியைப் போன்று தேர்தலை தள்ளிப் போடச் செய்து, மக்களின் ஜனநாயக உரிமையை மறுக்கும் எந்தவொரு நடவடிக்கையிலும் மக்கள் விடுதலை முன்னணி ஈடுபட மாட்டாது எனவும் ஜே.வி.பி. மேலும் நீண்ட அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

