நடன இயக்குநரும், நடிகருமான ராகவா லோரன்ஸ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘ருத்ரன்’ எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘பகை முடி..’ எனும் இரண்டாவது பாடல் வெளியிடப்பட்டிருக்கிறது.
இந்த பாடலுடன் பாடலுக்கான காணொளியும், லிரிக்கல் வீடியோவும் வெளியாகி இருக்கிறது.
தயாரிப்பாளரான கதிரேசன் இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம் ‘ருத்ரன்’. இதில் ராகவா லோரன்ஸ் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் நடித்திருக்கிறார்.
இவர்களுடன் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். ஆர். டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார்.
எக்சன் என்டர்டெய்னர் ஜேனரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் எனும் பட நிறுவனம் மூலம் தயாரிப்பாளர் கதிரேசன் தயாரித்திருக்கிறார்.
ஏப்ரல் 14 ஆம் திகதி முதல் உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாக இருக்கும் இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் சிங்கிள் ட்ராக் ஆகியவை வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்ற ‘முடி முடி பகை முடி பலி கொடுத்தவன் கதை முடி..’ எனத் தொடங்கும் பாடலை பாடலாசிரியர் கருணாகரன் எழுத, பின்னணி பாடகர் திவாகர் பாடியிருக்கிறார்.
துள்ளலிசையாகவும், கதையுடன் கூடிய பாடலாகவும் இடம்பெறும் இந்த பாடலில் ராகவா லோரன்ஸ் இந்து மத சாமியார்களுடன் தோன்றி நடனமாடும் காட்சி ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.