ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் செர்ஜி லவ்ரொவ் (Sergey Lavrov) ஒரு நாள் விஜயத்தை மேற்கொண்டு எதிர்வரும் ஜனவரி 14ஆம் இலங்கை வரவுள்ளார்.
இதனை ரஷ்ய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மரிஆ ஸக்ஹரோவா (Maria Zakharova) தெரிவித்துள்ளார்.
இவரது விஜயத்தின் போது, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உட்பட வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன ஆகியோரையும் சந்தித்து பேசவுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

