ரயில் கட்டணத்தை, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல் 15 வீதத்தால் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.அந்தவகையில் 10 வருடங்களின் பின்னர் இந்த இந்த ரயில் கட்டணத்தினை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
எரிபொருள்கள் விலை கடந்த காலங்களில் அதிகரிக்கப்பட்டு வருகின்ற நிலையிலும், ரயில் கட்டணத்தில் இதுவரை காலமும் எவ்வித மாற்றங்களும் கொண்டுவரப்படவில்லை.
இந்நிலையில் புதிய அதிகரிப்பு தொடர்ப்பிலான வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வௌியிடப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது
