மகாவலி குடியேற்ற திட்டத்தின் கீழ் காணி உறுதிகளை வழங்கும் ‘ரன் தியவர’ நிகழ்வு, ஜனாதிபதி தலைமையில் இன்று இடம்பெறவுள்ளது.
நாடளாவிய ரீதியில் 10 இலட்சம் காணி உறுதிகளை வழங்கும் தேசிய நிகழ்ச்சித் திட்டத்தில் மகாவலி வலயத்தில் உள்ள விவசாயிகளுக்கு ஒரு லட்சம் காணி உறுதிகளை வழங்கும் திட்டத்தின் கீழ் இது நடைமுறைப்படுத்தப்படுவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, இன்று மகாவலி பி, சீ ரம்புக்கன் ஓயா வலயத்தின் 22 பௌத்த விகாரைகளுக்களுக்கும், 50 அரச நிறுவனங்களுக்கும் என மொத்தமாக 12 ஆயிரம் காணி உறுதிகள் வழங்கப்படவுள்ளன.
2016ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட இந்த திட்டத்தின் கீழ், இதுவரையில் மகாவலி வலயத்தில் மாத்திரம் ஒரு இலட்சம் காணி உறுதி பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
அத்துடன், அனுமதிப்பத்திரங்களை வழங்கி நீண்டகால குத்தகையின் அடிப்படையில் மேலும் 40 ஆயிரம் காணி உறுதிகளை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.