ஜனாதிபதியவர்களே இன்னும் நீங்கள் பார்த்துக் கொண்டிருக்க வேண்டாம் எனவும், நாடு வீழ்ந்திருக்கும் பாதாளத்திலிருந்து மீட்டுப்பதற்கு இந்தப் பாராளுமன்றத்தில் அதிக நம்பிக்கையை வென்ற ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
தனது கட்சி, தான் சார்ந்த குழு, தனது சுயவிருப்பு வெறுப்புக்களுக்கும் இடமளிக்காமல் தன்னை நம்பியுள்ள நாட்டிலுள்ள 220 லட்சம் மக்களின் நலனுக்காக தீர்மானம் எடுக்க முன்வருமாறும் ஜனாதிபதியிடம் அவர் கேட்டுக் கொண்டார்.
நேற்று (12) பாராளுமன்றத்தில் உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறினார்.

