ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை இன்று (புதன்கிழமை) கொண்டுவரப்படுமென கூட்டிணைந்த எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.
குறித்த பிரேரணை நேற்று நாடாளுமன்ற அமர்வில் சமர்ப்பிக்கப்படுமென தெரிவிக்கபட்டிருந்த போதும், போதிய உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்காத நிலையில் தற்போது ஒன்றிணைந்த எதிரணியின் 50 இற்கும் அதிகமானோர் கையெழுத்திட்டுள்ளதாக கட்சியின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அந்தவகையில் இன்று குறித்த பிரேரணையை நாடாளுமன்றில் சமர்ப்பிக்க ஒன்றிணைந்த எதிரணி தீர்மானித்துள்ளது.
மத்திய வங்கியின் பிணைமுறி விவகாரம் தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. அதனைத் தொடர்ந்து கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலிலும் தனித்துப் பெரும்பான்னையை நிரூபிக்க ஐக்கிய தேசியக் கட்சி தவறிவிட்டது.
இந்நிலையில் பிரதமர் பதவியில் நீடிப்பதற்கு ரணில் விக்ரமசிங்க தகுதியற்றவர் எனக்கூறி அவரைப் பதவி விலகுமாறு ஒன்றிணைந்த எதிரணி தொடர்ந்தும் வலியுறுத்தி வந்தது. அந்தவகையிலேயே இந்த நம்பிக்கையல்லா பிரேரணை முன்வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.