நல்லாட்சி அரசாங்கத்தின் 2 வது அமைச்சரவை மாற்றத்தில் சட்டம் ஒழுங்கு அமைச்சராக பிரதமர் ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலின் பின்னர் நல்லாட்சிக்கு மஹிந்த தரப்பினரின் மட்டுமன்றி பல பக்கங்களில் இருந்தும் அழுத்தம் கொடுக்கப்பட்டு வந்தது.
இதன் காரணமாக நாடே கடந்த 2 வாரங்களாக பரபரப்புடன் காணப்பட்ட நிலையில், ஐ.தே.காவின் அமைச்சர்கள் பதவியை மாற்றம் செய்யுமாறும், பிரதமரை பதவி துறக்க வேண்டும் எனவும் பல்வேறு மேடைகளில் பேசுபொருளாக மாறியது.
இந்த சம்பவங்கள் இடம்பெறுக்கொண்டிருக்கும் நிலையில், முன்னாள் இராணுவ தளபதி மேஜர் ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு சட்டம் ஒழுங்கு அமைச்சு பதவியை வழங்குமாறு பலராலும் கருத்துக்கள் முன் வைக்கப்பட்டது.
தொடர்ந்து, சரத் கூட ஒருநாள், தான் அந்த பதவியில் இருந்தால், கடந்த கால அரசாங்கத்தில் இடம்பெற்ற அனைத்து ஊழல் மோசடிகளுக்கும் 6 மாதங்களில் தீர்வை பெற்று தருவேன் என கூறினார்.
இவ்வாறு நாட்கள் கடந்து செல்ல கடந்த வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தின் பின்னர் அமைச்சரவை மற்ற இடம்பெறும் என தகவல்கள் வெளியாகியிருந்தும் இது இடம்பெறவில்லை.
இந்த நிலையில் அன்றைய தினமே அமைச்சர் சரத் பொன்சேகா வெளிநாட்டு பயணம் ஒன்றினை மேற்கொண்டிருந்தமையால், அவரது அமைச்சு பதவி வேறு ஒருவருக்கு பதிலாக வழங்கப்பட்டது.
அவ்வாறு செல்ல, இந்த அமைச்சரவை மாற்றம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெறும் என சுகாதார அமைச்சரும், அமைச்சரவை பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் சட்டம் ஒழுங்கு அமைச்சர் சரத்திற்குத்தான் வழங்கப்படும் என எண்ணிக்கொண்டிருந்த வேளையில், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு வழங்கப்பட்டிருந்தது.
ஆனால் தற்போது பொன்சேகா வெளிநாடு சென்றிருக்கும் காரணமாகவே அமைச்சு பதவி பிரதமருக்கு வழங்கப்பட்டதாகவும், அவர் ஒரு வாரத்தின் பின்னர் நாடு திரும்பியதும் அந்த பதவி அவருக்கு வழங்கப்படும் எனவும் சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
இருப்பினும் அமைச்சரவை மாற்றம் வருமா எனபதை அடுத்த மாதம் வரையில் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.