ஜனநாயகத்தை மதிக்கும் அனைத்து கட்சிகளையும் இணைத்துக்கொண்டுபுதிய அரசியல் கூடடணியொன்றை உருவாக்கி அதனை தேர்தல் ஆணையகத்திலும் பதிவுசெய்யத்தீர்மானித்துள்ளதாக ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கஅறிவித்துள்ளார்.
ஜனநாயகத்தை நிலைநாட்டுவதே புதிய கூட்டணியின் பிரதானநோக்கமாக இருக்கும் என்றும் ரணில் விக்கிரமசிங்க உறுதிப்படுத்தியுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் அதன் பங்காளிக் கட்சிகளின்இணைந்து உருவாக்கியுள்ள ஐக்கிய தேசிய முன்னணியின் கீழ் கடந்தஉள்ளுராட்சி சபைத்தேர்தலில் போ்டியிட்டு வெற்றிபெற்ற உள்ளுராட்சி சபைகளின் பிரதிநிதிகளுடனானசந்திப்பொன்று இன்றைய தினம் இடம்பெற்றது
இதில் ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்கள் அனைவரும்கலந்துகொண்ட நிலையில், அங்கு உரையாற்றிய ரணில் விக்கிரமசிங்க,நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கான போராட்டத்தில் தன்னுடன்கைகோர்த்திருக்கும் அனைத்து கட்சிகளினதும் தலைவர்களின் பெயர்களையும், கட்சிகளையும் குறிப்பிட்டு நன்றி தெரிவித்துக்கொண்டார்.
அதேவேளை ஜனநாயகத்திற்காக குரல்கொடுக்கும் அனைத்துத்தரப்பினரையும் இணைத்துக்கொண்டு பரந்துபட்ட பலமான புதிய கூட்டணியொன்றைஉருவாக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்த ரணில், இந்தக்கூட்டணி விரைவில் சதிகள் மூலம் ஆட்சியை பலவந்தமாக கைப்பற்றியிருக்கும் அணியைதோற்கடிக்கும் என்றும் சூளுரைத்தார்.
அதனையடுத்து அரசியல் சதியை அடுத்து ஏற்படுத்தப்பட்டுள்ளகுழப்பங்கள் அனைத்திற்கும் துரிதமாக தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதுடன், இனிவரும்காலங்களில் ஒருபோதும் சதி அரசியல் மேற்கொள்ள முடியாத அளவிற்க நாட்டின் அரசியல்நடைமுறைகளை மாற்றியமைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் வாக்குறுதி அளித்துள்ளார்.