Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

ரணிலை பதவியில் இருந்து நீக்க முடியாது | நீக்க முயற்சித்தால் இரத்த களரி ஏற்படும்

September 17, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
ரணில் அமைக்கும் உயர் அதிகாரம் கொண்ட குழு!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கிரகப்பலன் மிக வலுவாக இருப்பதால், 2025 ஆம் ஆண்டு வரை அவரை பதவியில் இருந்து நீக்க முடியாது என பிரபல சோதிடர் பி.ஜீ.பீ.கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

2025 ஆம் ஆண்டுக்கு முன்னர் ஒரு நபர் அல்லது பலம் கொண்ட அணி ரணில் விக்ரமசிங்கவை பதவியில் இருந்து நீக்க முயற்சித்தால், அது மிகப் பெரிய இரத்த களரியில் முடிவடையும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இணையத்தள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை கூறியுள்ளார்.

ஜனாதிபதியின் கிரகப்பலன்கள் பலமாக இருக்கின்றன

ரணில் விக்ரமசிங்க-Ranil Wickremesinghe

கிரகங்கள் பலவீனமடைவதால், ஆட்சியாளர்களுக்கு பிரச்சினைகள் ஏற்படும். எனினும் ஆட்சியை கவிழ்க்க முடியாது. 2025 ஆம் ஆண்டு வரை அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது.

2025 ஆம் ஆண்டு வரை தேர்தல்கள் நடத்தப்படும் வாய்ப்புகள் இல்லை. 2025 ஆம் ஆண்டு மிகப் பெரிய ஆட்சி மாற்றம் ஏற்படும். மக்கள் மத்தியில் பாரிய மாற்றம் ஏற்படும். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கிரகப் பலன்கள் பலமாக இருக்கின்றன. ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி பதவிக்கு வருவதை தடுத்து நிறுத்த முடியாது என்று இதற்கு முன்னர் நான் கூறியிருந்தேன்.

மகிந்தவின் அரசியல் முடிவுக்கு வந்து விடும் 

பி.ஜீ.பீ.கருணாரத்ன-B.G.P Karunaratne

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியலை பொது மக்கள் முற்றாக நிராகரித்துள்ளனர். அவர்களால், ஆட்சிக்கு வர முடியாது. பொதுஜன பெரமுன முடிவுக்கு வந்து விடும். பொதுஜன பெரமுனவின் தலைவரது(மகிந்த ராஜபக்ச) அரசியல் காலம் முடிவுக்கு வந்து விடும் என எனக்கு புலப்படுகிறது.

இன்னும் மூன்று ஆண்டு காலம் அவரது அரசியல் செயற்பாடுகள் இருக்கும்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் புதல்வர் அரசியலில் பிரவேசித்து தேர்தலில் போட்டியிட்டால், முதல் தேர்தலிலேயே வெற்றி பெறுவார்.

அனுரகுமார ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார் 

அனுரகுமார திஸாநாயக்க -Anura Kumara Dissanayake

அதேவேளை 2025 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட்டால், மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க நாட்டின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார்.

போராட்டங்கள் நடத்தப்பட்டால், 2025 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் ஒத்திவைக்கப்படலாம். போராட்டகாரர்கள் தேர்தல் ஒன்றை நடத்துமாறு கோர வேண்டும். தேர்தல் நடத்தப்பட்டால், அனுரகுமார திஸாநாயக்க முதலிடத்திற்கு வருவார். எவராலும் அதனை தடுக்க முடியாது.

2025 ஆம் ஆண்டுக்கு முன்னர் ரணில் விக்ரமசிங்கவை பதவியில் இருந்து அப்புறப்படுத்த முயற்சித்தால், பெரிய இரத்த சிந்தல்கள் ஏற்படும். மக்கள் அச்சம் கொள்வார்கள். இதன் பின்னர் மறுதிகதி அறிவிக்கப்படாது தேர்தல் ஒத்திவைக்கப்படலாம். அப்போது அனுரகுமார ஆட்சிக்கு வருவது தடுத்து நிறுத்தப்படும் எனவும் பி.ஜீ.பீ.கருணாரத்ன தெரிவித்துள்ளார். 

Previous Post

குருந்தூர்மலை பகுதியில் விவசாய நிலங்கள் ஆக்கிரமிப்பு – சார்ள்ஸ் எம்.பி. நேரில் விஜயம்

Next Post

மகாராணியின் இறுதிச் சடங்கு | வரலாற்றில் இடம்பிடிக்கும் ஜனாதிபதி ரணில்

Next Post
இங்கிலாந்து ராணி எலிசபெத் மரணம்- உலக தலைவர்கள் இரங்கல்

மகாராணியின் இறுதிச் சடங்கு | வரலாற்றில் இடம்பிடிக்கும் ஜனாதிபதி ரணில்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures