முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நீதிமன்றில் முன்னிலையான போது ஏற்பட்ட மின் தடை அவருக்கு மரண தண்டனை விதிக்கும் முடிவின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்று தான் அஞ்சியதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சி அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் இன்று (24) கலந்து கொண்ட சந்திப்பிற்குப் பிறகு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மெழுகுவர்த்தி ஏற்றி தீர்ப்பு
வழக்கமாக மரண தண்டனை விதிக்கப்படும் போது, நீதிபதிகள் விளக்குகளை அணைத்துவிட்டு மெழுகுவர்த்திகளை ஏற்றி தீர்ப்பை அறிவிப்பார்கள் என்று தான் கேள்விப்பட்டதாக வஜிர கூறியுள்ளார்.

அன்றைய தினம் அப்படி ஏதாவது நடந்து விடுமோ என்று தான் அச்சமைடைந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 22 ஆம் திகதி ரணில் விக்ரசிங்க நீதிமன்றில் முன்னிலையாகி வழக்கு விசாரணை இடம்பெற்றிருந்த வேளை, பல மணி நேரத்திற்கு நீதிமன்ற வளாகத்தில் மின் தடை ஏற்பட்டது.
பின்னர், இரவு 10 மணியளிவில் மின் விநியோகம் வழமைக்கு திரும்பிய நிலையில், ரணில் விக்ரமசிங்கவுக்கு விளக்கமறியல் அறிவிக்கப்பட்டது.