முன்னாள் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மற்றும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு எதிராக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றங்களை விசாரிப்பதற்கான ஆணைக்குழுவில் (CIABOC) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மற்றும் தொழில்நுட்ப அமைச்சராக இருந்த ரணில் விக்ரமசிங்க ஆகிய இரு அமைச்சுக்கள் இணைந்து 1.7 பில்லியன் பெறுமதியான 1000 ஸ்மாட் பலகைகள் மற்றும் அதற்கு தேவையான உபகரணங்கள கொள்வனவு செய்தலில் வெளிப்படத்தன்மை அற்றதால் அதனை விசாரிக்குமாறு இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறித்த முறைப்பாட்டை தொலைத்தொடர்பு ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழுவின் அத்தியட்சகர் நாயகம் பந்துல ஏரத் மேற்கொண்டுள்ளார்.
பொருட்கள் கொள்வனவு
அது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், “கடந்த அரசின் தொழில்நுட்ப அமைச்சும் கல்வி அமைச்சும் இணைந்து ஸ்மாட் வகுப்பறை அமைப்பதற்காக ஸ்மாட் போட், UPS, மடிக் கணனி ஆகியவற்றை கொள்வனவு செய்வதற்காக அமைச்சரவை பத்திரம் ஒன்றை சமர்ப்பித்து தொலைத்தொடர்பு ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழுவின் நிதியத்தில் குறித்த பொருட்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன.

கொள்வனவுக்கான முழு தொகை 1.4 பில்லியன் வரிகள் இல்லாமல்.இது வரை அது தொடர்பில் 1.7 பில்லியன் செலவழிக்கப்பட்டுள்ளது.இன்றும் 700 மில்லியன் வரிகள் இல்லாமல் சேவை கட்டணமாக செலுத்தப்படவுள்ளது.ஆனால் பொருட்களுக்கான பணம் செலுத்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தல்
மிகுதி பணம் செலுத்துவதற்கு முன்னர் அதில் வெளிப்படை தன்மை இல்லாததாலே முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஜனாதிபதி தேர்தல் நடைபெறுதற்கு இரு வாரங்களுக்கு முன் குறுகிய ஐந்து நாட்களில் இந்த பொருட்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.
இப்பொருட்கள் ஒரு வருடகாலமாக மத்தலகெதர ஆசிரியர் பயிற்சி கல்லுரி களஞ்சியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தல் நடைபெற்ற காலத்தில் இவை வழங்கப்பட முடியாமல் பொயிருக்கலாம் என தெரிவருகிறது.” என்றார்.