ரணில் விக்கிரமசிங்க தலைமை அமைச்சர் பதவியை வகிக்க வேண்டுமானால் நாடு கடந்த தமிழீழ அரசின் தலைமை அமைச்சர் பதவி வெற்றிடமாக உள்ளது. அந்தப் பதவியை அவர் பெற்றுக் கொள்ளலாம்.
இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
தலைமை அமைச்சர் அலுவலகத்தில் நேற்று நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தெரிவித்தாவது-
கூட்டரசின் தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க நாட்டு மக்களின் தேவைகளை முன்னிலைப்படுத்திச் செயற்படவில்லை. அவர் மேற்குலக நாடுகள், புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் போன்றவற்றுக்காகவே செயற்பட்டார். அவர்களே ரணிலை ஆதரிக்கின்றனர்.
அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தனது வாழ்நாளில் ரணிலை மீளத் தலைமை அமைச்சராக நியமிக்க மாட்டேன் என்று உறுதியளித்துள்ளார். ஒருவோளை ரணில் மீண்டும் தலைமை அமைச்சரானால் எவ்வாறான விளைவுகளை நாடு எதிர்கொள்ளும் என்பதை அவர் நன்கு அறிவார்.- என்றார்.