Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Politics

ரணிலின் தீர்வு ஏற்க்க முடியாதது – டிலான்

August 4, 2018
in Politics, World
0
ரணிலின் தீர்வு ஏற்க்க முடியாதது – டிலான்

தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க முன்­வைக்­கும் எந்­த­வொரு அர­சி­யல் தீர்வு யோச­னை­க­ளை­யும் சிங்­கள மக்­கள் ஏற்­றுக்­கொள்­ள­மாட்­டார்­கள். மைத்­தி­ரி­பா­ல­வும், மகிந்த ராஜ­பக்­ச­வும் இணைந்து முன்­வைக்­கும் தீர்வு யோச­னை­க­ளையே சிங்­கள மக்­கள் நம்­பு­வார்­கள்.

இவ்­வாறு சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யில் தனித்து இயங்­கும் 16 நாடா­ளு­மன்ற உறுப்­பி னர்­கள் குழு­வைச் சேர்ந்­த­வ­ரான டிலான் பெரேரா தெரி­வித்­தார்.

சிங்­கள மக்­கள் சந்­தே­கித்­தால் தமிழ் மக்­க­ளுக்­குத் தீர்­வில்லை, அதனை உணர்ந்து செயற்­ப­ட­வேண்­டும் என்று இதே குழு­வைச் சேர்ந்த தயா­சிறி ஜய­சே­கர மூன்று தினங்­க­ளுக்கு முன்­னர் தெரி­வித்­தி­ருந்த நிலை­யில், அதே அணி­யைச் சேர்ந்த டிலான் பெரேரா நேற்று இவ்­வாறு கூறினார். கொழும்­பில் நேற்று இடம்­பெற்ற செய்­தி­யா­ளர் சந்­திப்­பில் அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:அரசை வீழ்த்த பொது எதி­ர­ணி­யாக நாம் முன்­னெ­டுத்­துள்ள போராட்­டம் வெற்­றி­ய­டைந்­துள்­ளது. அடுத்த கட்­டங்­க­ளில் நாம் முன்­னெ­டுக்­கும் போரட்­டங்­க­ளுக்கு இது நல்­ல­தொரு ஆரம்­பம்.

ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை வெளி­யேற்­றி­விட்டு புதிய தலைமை அமைச்­சரை நிய­மிக்­க­வேண்­டும். நாம் அதே பழைய போராட்­டத்­தையே முன்­னெ­டுத்து வரு­கின்­றோம் என்­கிற மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வின் கருத்­துக்­க­ளில் உண்மை உள்­ளது.

அவர் கூறி­யதை போல் நாம் பழைய போராட்­டத்­தையே இன்­றும் முன்­னெ­டுத்து வரு­கின்­றோம்.

மக்­க­ளின் வாழ்­வா­தா­ரப் பிரச்­சி­னை­கள் அதி­க­ரித்­துள்­ளது, விலை அதி­க­ரிப்பு, வரி அதி­க­ரிப்பு என்ற விட­யங்­க­ளுக்கு இன்­ன­மும் அரசு தீர்வு பெற்­றுக்­கொ­டுக்­க­வில்லை.

சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யு­டன் எமக்கு எந்த முரண்­பா­டு­க­ளும் இல்லை. அரச தலை­வ­ரு­டன் இணைந்து சுதந்­தி­ரக் கட்­சி­யா­கவே செயற்­பட்டு வரு­கின்­றோம். ஐக்­கிய தேசி­யக் கட்­சியை எதிர்ப்­ப­தன் கார­ண­மா­கவே நாம் பொது எதி­ர­ணி­யாக அடை­யா­ளப்­ப­டுத்­து­கின்­றோம்.

இப்­போ­தைய தலைமை அமைச்­சரை வெளி­யேற்ற வேண்­டும் என்­றால் அதற்கு அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வின் ஆத­ரவு வேண்­டும். மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்­றும் மகிந்த ராஜ­பக்ச ஆகி­யோர் இணைந்து முன்­னெ­டுக்­கும் ஆட்­சி­யையே மக்­க­ளும் விரும்­பு­வார்­கள்.

புதிய அர­ச­மைப்­புத் திருட்­டுத்­த­ன­மாக முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றது. இன்று அனைத்து தரப்­பி­ன­ரும் எதிர்­பார்க்­கும் அர­சி­யல் தீர்வு விட­யத்­தில் தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க முன்­வைக்­கும் எந்­தத் தீர்­வை­யும் பெரும்­பான்மை மக்­கள் நம்­பப் போவ­தில்லை. அர­சி­யல் தீர்­வாக அவர் முன்­வைக்­கும் அனைத்து தீர்­வு­க­ளி­லும் குழப்­பங்­க­ளும், சந்­தே­கங்­க­ளும் உள்­ளன என்­பதே மக்­க­ளின் நிலைப்­பா­டா­கும்.

அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வும், மகிந்த ராஜ­பக்­ச­வும் முன்­வைக்­கும் அர­சி­யல் தீர்வு விட­யங்­களை நாட்­டின் சகல மக்­க­ளும் ஏற்­று­கொள்­வார்­கள். பெரும்­பான்மை மக்­கள் முழு­மை­யாக ஆத­ரிப்­பார்­கள். மகிந்த ராஜ­பக்ச மீதான பெரும்­பான்மை மக்­க­ளின் நம்­பிக்கை இன்­றும் அவ்­வாறே உள்­ளது. மகிந்­தலு மைத்­திரி தரப்­பி­னர் ஒன்­றி­ணை­ய­வேண்­டும் என்­பதே எம் அனை­வ­ர­தும் நிலைப்­பா­டா­கும்.

அடுத்து எந்­தத் தேர்­தல் இடம்­பெற்­றா­லும் அதில் மகிந்த ராஜ­பக்ச யாரை கள­மி­றக்­கு­கின்­றாரோ அவரே தலை­வ­ரா­வார். மகிந்த ராஜ­பக்­சவை தலைமை அமைச்­ச­ராக்கி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை அரச தலை­வ­ராக்கி சுதந்­தி­ரக் கட்­சி­யின் தூய்­மை­யான ஆட்­சியை கொண்­டு­செல்ல வேண்­டும் என்ற நிலை­பாட்­டில் இருந்து நாம் செயற்­பட்டு வரு­கின்­றோம்.

அடுத்த தமிழ் – சிங்­கள புத்­தாண்­டுக்கு முன்­னர் அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வின் மூல­மா­கவே மகிந்த ராஜ­பக்ச தலைமை அமைச்­ச­ரா­வார். அது உறு­தி­யாக நடை­பெ­றும் – என்­றார்.

Previous Post

தாக்­கு­தல் நடத்­தி­யோரை கைது செய்ய நட­வ­டிக்கை

Next Post

மாகாண சபை நிர்­வா­கத்தை நடத்­தத் தெரி­யாத முதலமைச்சர்

Next Post
மாகாண சபை நிர்­வா­கத்தை நடத்­தத் தெரி­யாத முதலமைச்சர்

மாகாண சபை நிர்­வா­கத்தை நடத்­தத் தெரி­யாத முதலமைச்சர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures