காலஞ்சென்ற பிரபல சிங்கள திரைப்பட இயக்குநர் லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸின் வீட்டில் காணாமல் போன “ரணமயுர பதக்கம்” கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடுவெல – கொள்ளுப்பிட்டி தனியார் பஸ் ஒன்றில் கைவிடப்பட்ட நிலையில் இப்பதக்கம் காணப்பட்டதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கம்பெரலிய சிங்கள திரைப்படத்துக்காக கடந்த 1965 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற திரைப்பட விருது வழங்கும் விழாவின் போது இந்த பதக்கம் அவருக்கு வழங்கப்பட்டிருந்தது.
லெஸ்டர் ஜெம்ஸ் பீரிஸின் இறுதிக் கிரியை நிகழ்வின் போது இந்த பதக்கம் அவரது வீட்டிலிருந்து காணாமல் போயிருந்தது. இதனைத் தேடி பொலிஸார் பல மட்டங்களிலும் விசாரணைகளை ஆரம்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.