முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரஞ்ஜன் ராமநாயக்கவின் உயர் தரப் பரீட்சைப் பெறுபேறு ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
வெளியாகியுள்ள அவரது உயர்தரப் பரீட்சைப் பெறுபேறு அவரது முகநுால் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
அவர் எழுதிய மூன்று பாடங்களில் அரசியல் விஞ்ஞானம் மற்றும் தகவல் தொடர்பாடல் ஆகிய பாடங்களில் இரு S தரச் சித்திகளையும், கிறிஸ்தவ சமயப் பாடத்தில் F தர பெறுபேற்றையும் பெற்றுள்ளார்.
ஆங்கில பாடத்தில் ஏ. சித்தியும், பொது அறிவுப் பாடத்தில் 50 புள்ளிகளையும் பெற்றுள்ளார்.

