பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜன் ராமநாயக்கவிடமுள்ள ஒரு லட்சத்து 20 ஆயிரம் இரகசிய குரல் பதிவுகள் தொடர்பிலும் அரச இரசாயனப் பகுப்பாய்வு அறிக்கை கிடைத்தவுடன், 10 பொலிஸ் குழுக்களை நியமித்து அனைத்து குரல் பதிவுகளையும் கேட்கச் செய்து, அதிலுள்ள குற்றச்சாட்டுக்களுடன் சம்பந்தப்பட்ட சகலரிடமும் வாக்கு மூலம் பதிவு செய்வதற்கு பொலிஸ் தலைமையகம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் 15 ஆம் திகதியாகும் போது அரச பகுப்பாய்வுத் திணைக்களத்திடமிருந்து ரஞ்ஜனின் குரல் தொடர்பான அறிக்கை கிடைக்கவுள்ளதாகவும், அது கிடைத்தவுடன் பொலிஸார் விசாரணை நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளதாகவும் தலைமையகம் தெரிவித்துள்ளது.
ரஞ்ஜனிடமிருந்து கண்டெடுக்கப்பட்ட குரல் பதிவுகளில் நீதிபதிகள், அரச அதிகாரிகள், அரசியல்வாதிகள், உயர் பொலிஸ் அதிகாரிகள் உட்பட இன்னும் பலருக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் விடுக்கப்பட்டுள்ளதாகவும் தலைமையகம் அறிவித்துள்ளது.
இந்த குரல் பதிவுகள் தொடர்பில் விசாரணை முன்னெடுக்கத் தேவையான நவீன உபகரணங்கள் அனைத்தையும் பயன்படுத்தவுள்ளதாகுவும் தலைமையகம் மேலும் கூறியுள்ளது.

