நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா? என்ற கேள்விக்கு இன்னும் விடை தெரியாமலே உள்ளது. இருப்பினும் ரஜினிகாந்தை தங்களது கட்சியின் பக்கம் இழுக்கும் முயற்சியை தமிழக அரசியல் கட்சிகள் விட்டபாடாக தெரியவில்லை.
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்தை தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் இன்று சந்தித்துள்ளார். திருநாவுக்கரசர் தனது குடும்ப நிகழ்ச்சிக்கு நேரில் சென்று அழைப்பு விடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே, ஆர்.கே.நகர் தேர்தல் பிரச்சாரத்தின் நடுவே பா.ஜ.க. வேட்பாளர் கங்கை அமரன் ரஜினி காந்தை அவரது இல்லத்திற்கு சென்று சந்தித்து இருந்தார். இருப்பினும் அரசியல் யூகங்கள் எழுவதற்கு முன்பாக அது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று ரஜினிகாந்த் உடனடியாக தெரிவித்துவிட்டார்.
பா.ஜ.க.வை சேர்ந்த ஒருவர் சந்தித்ததைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருநாவுக்கரசர் ரஜினிகாந்தை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.