சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் அரசியல் பற்றிய தனது எண்ணங்களை ரசிகர்களிடம் தெரிவித்திருந்தார். இது பற்றி பலரும் தங்களது கருத்தை தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் ரஜினி வெளிநாட்டில் உள்ள தொழிதிபருடன் தொலைபேசியில் இரண்டு நாட்களுக்கு கட்சிக்கொடி வடிவமைப்பது பற்றி உரையாடியுள்ளார்.
மேலும் அவர் தனக்கு வேண்டிய மிக முக்கிய பத்திரிக்கை ஆசிரியரிடமும் இது பற்றி ஆலோசனை நடத்தியுள்ளார். சுதந்திர தினத்தன்று அறிவிப்பை வெளியிடுவதாக திட்டமிட்டுள்ளாராம்.
இதில் நடிகை மீனா, நமீதா ஆகியோர் அவரது கட்சியில் சேர விருப்பம் தெரிவித்துள்ளனர். தற்போது அவருக்கு தொலைபேசி மூலம் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.