சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 72-வது வயதில் இன்று அடியெத்து வைத்துள்ள நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பா.ஜனதா தலைவர் அண்ணாலை உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது பிறந்தநாள் வாழ்த்து செய்தியில் ‘‘உள்ளார்ந்த அன்புடன் பழகிடும் இனிய நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்குப் பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
72-ஆவது அகவையில் அடியெடுத்து வைக்கும் அவர், இன்னும் பல ஆண்டுகள் தமிழ் மக்களைத் தன்னிகரற்ற தனது திரையாளுமையால் மகிழ்விக்கவும்; நல்ல உடல்நலத்துடன் திகழவும் விழைகிறேன்.’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்
கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ‘‘”என் மாருமேல சூப்பர் ஸ்டார்”
80’s பில்லாவும் நீங்கள்தான்
90’s பாட்ஷாவும் நீங்கள்தான்
2k அண்ணாத்த நீங்கள்தான். சினிமா பேட்டையோட
ஒரே சூப்பர் ஸ்டார் தலைவா ரஜினிகாந்த் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் #HBDSuperstarRajinikanth #SuperstarRajinikanth #ரஜினிகாந்த்’’ என டுவிட்டதில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை
தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை ‘‘இன்று பிறந்தநாள் கொண்டாடும் தாதாசாகெப் பால்கே, சூப்பர் ஸ்டார் ஸ்ரீ.
ரஜினிகாந்த் அவர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்
அவர் நல்ல ஆரோக்கியத்துடன் சீரும் சிறப்புமாக வாழ நான் அந்த இறைவனை வேண்டிக்கொள்கிறேன்
மகாவதார் பாபாஜியின் கருணையும் அருளும் என்றும் கிடைக்கட்டும்!’’ என டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]