ரசிகர்களால் பீட்டாவுக்கு எதிராக திரிஷா எடுத்த அதிரடி முடிவு
ஜல்லிக்கட்டு நடந்தே ஆக வேண்டும் என்று தமிழ்நாட்டு மக்கள் தீவிரமாக இருக்கின்றனர். அதிலும் இளைஞர்கள் இந்த முறை ஒன்று கூடி பல போராட்டங்களை செய்து வருகின்றனர்.
இதற்கு நடுவில் ஜல்லிக்கட்டு, பீட்டா பிரச்சனை காரணமாக திரிஷா ரசிகர்களால் மிகவும் மோசமாக தாக்கப்பட்டார்.
இந்நிலையில் திரிஷாவின் அம்மா ஒரு பேட்டியில், த்ரிஷாவின் டுவிட்டர் கணக்கை ஹேக் செய்து தவறான கருத்தை பதிவு செய்துள்ளனர். ஜல்லிக்கட்டிற்கு எதிரான எந்த கருத்தையும் த்ரிஷா தெரிவிக்கவில்லை, பீட்டா அமைப்பிலும் அவர் இல்லை என திரிஷாவின் தாயார் உமா பேட்டியில் கூறியுள்ளார்.