மதுபோதையில் வாகனத்தை செலுத்தி விபத்துக்கு காரணமாக இருந்த குற்றச்சாட்டின் பேரில் இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டாரவின் மகன் யசோத ரங்கே பண்டார பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த போதே இவர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டாரவின் மகன் ஓட்டிச் சென்ற வாகனம் விபத்துக்குள்ளாகும் போது அவர் போதையில் இருந்துள்ளமை மருத்துவ பரிசோதனையின் போது உறுதியாகியிருந்தது. இவர் தொடர்பான விடங்கள் பொலிஸாரினால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியிருந்தனர்.
நீதிமன்ற உத்தரவு கிடைத்தவுடன் அவரைக் கைது செய்யவுள்ளதாக பொலிஸார் நேற்று தெரிவித்திருந்தனர்.
அமைச்சரின் மகன் செலுத்திய வாகனம் அமைச்சு ஒன்றுக்கு சொந்தமானது என்பதும் இந்த வாகனம் நேற்று முன்தினம் அதிகாலை சிலாபம் – புத்தளம் வீதியிலுள்ள பங்கதெனிய – கொட்டபிட்டி எனும் இடத்தில் விபத்துக்குள்ளாகியதும் குறிப்பிடத்தக்கது.