விபத்து சம்பவம் ஒன்று தொடர்பில் கைது செய்யப்பட்ட இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கேபண்டாரவின் மகன் யசோத ரங்கே பண்டார விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அவரை ஜூன் 12ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நுகேகொடை பதில் நீதவான் திஸ்ஸ விஜேரத்ன இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சிலாபம் நீதவானின் எழுத்துமூலமான உத்தரவுக்கமைய நுகேகொடை பதில் நீதவான் வைத்தியசாலைக்கு வருகை தந்து சந்தேகநபரை பரிசோதித்த பின்னர் இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
அரசாங்க சொத்தை முறைகேடாக பயன்படுத்தியமை, குடி போதையில் வாகனம் செலுத்தியமை, வாள் ஒன்றை தம்வசம் வைத்திருந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சிலாபம் பொலிஸார் அவருக்கெதிராக நீதிமன்றத்தில் அறிக்கை முன்வைத்தமை குறிப்பிடத்தக்கது.