தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகர்களான ரவி பிரகாஷ் – யுவன் மயில்சாமி – கிரி – ஆகிய மூவரும் கதையின் நாயகர்களாக நடித்து வரும் ‘திரள் ‘எனும் திரைப்படத்தின் முதல் தோற்றப் பார்வை வெளியிடப்பட்டிருக்கிறது.
இதனை தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நட்சத்திர நடிகரான யோகி பாபு வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
இயக்குநர் மனோஜ் கார்த்தி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘திரள் ‘ எனும் திரைப்படத்தில் ரவி பிரகாஷ் , யுவன் மயில்சாமி, கிரி, அல்ஃபியா, மீரா ராஜ், சேரன்ராஜ் ,சாப்ளின் பாலு, நித்தின், தமிழினி, வெங்கடேஷ் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
அபி ஆத்விக் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஏ. ஈ. பிரசாந்த் இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படத்தை எஸ். எம். தமிழினி புரொடக்ஷன்ஸ் மற்றும் சி. பி. பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் கே. சசிகுமார் மற்றும் ஆர். சின்னசாமி ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.
எதிர்வரும் 19ஆம் திகதியன்று உலகம் முழுதும் படமாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தின் முதல் தோற்ற பார்வையை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.