“போரின் வலிகளை மனதளவில் பலமுறை உணர்ந்திருக்கின்றேன். இந்திய இராணுவம் கடுமையாகத் தாக்கியபோது உடலிலும் போரின் வலியை உணர்ந்தேன்.”
– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
சிறுப்பிட்டி தமிழறிஞர் சி.வை.தாமோதரம்பிள்ளை 187ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு, ‘இன்றைய சமஷ்டியின் விரிவாக்கம்’ எனும் தலைப்பில் நினைவுப் பேருரையை எம்.ஏ.சுமந்திரன் எம்.பி. வீரசிங்கம் மண்டபத்தில் நேற்று நிகழ்த்தினார்.
அவர் நினைவுப் பேருரை வழங்குவதற்கு முன்னதாக, வடக்கு மாகாண சபை உறுப்பினர் கே.சயந்தன், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனிடம் சில கேள்விகளை எழுப்பினார். அதற்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
‘சமஷ்டி தேவையற்றது என்று ஏன் கூறினீர்கள்’ என்ற கேள்விக்கு, “சமஷ்டி தேவையற்றது என்று நான் ஒருபோதும் தெரிவித்ததில்லை. அதனை அர்த்தமுள்ளதாக்குவதற்காக உழைப்பவன் நான்” என்று சுமந்திரன் எம்.பி. பதிலளித்தார்.
சுமந்திரன் எம்.பி. கேள்வி – பதிலின்போது மேலும் கூறியதாவது:-
“போரின் வலிகளை மனதளவில் பலமுறை உணர்ந்திருக்கின்றேன். இந்திய இராணுவம் கடுமையாக தாக்கியபோது என் உடலிலும் வலியை உணர்ந்தேன்” என்றார்.

