Thursday, September 11, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

யாழ் பிரதி மேயர், முஸ்லிமுக்கு இல்லை

December 10, 2017
in News, Politics
0

யாழ்ப்பாண முஸ்லிம்கள் 1990 இல் இனச்சுத்திகரிப்பு செய்யப்படுவதற்கு முன்னர் தமிழ் – முஸ்லிம் ஒற்றுமை சீராக விளங்கியது.

யாழ்ப்பாண முஸ்லிம்கள் பிரதி மேயர் பதவியையும் அலங்கரித்துள்ளனர்.

இந்நிலையில் தற்போது உள்ளுராட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. தமிழரசு கட்சி சார்பில் சில முஸ்லிம்களும் போட்டியிடவுள்ளனர்.

அதேவேளை தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிகளிற்கிடையில் நிலவிய ஆசனப்பங்கீட்டு சிக்கலிற்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

கொழும்பில் நடந்த கூட்டமைப்பின் உயர்மட்ட சந்திப்பில் இதற்கான முடிவுகள் எட்டப்பட்டன.

இதில் எதிர்கட்சி தலைவர் இரா.சம்பந்தன், புளொட் தலைவர் சித்தார்த்தன், தமிழரசுக்கட்சி தலைவர் மாவை.சேனாதிராசா, ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநான், வியாழேந்திரன், சுமந்திரன், ஆர்.இராகவன், சிறிகாந்தா, விந்தன் கனகரட்ணம், சிவாஜிலிங்கம். வினோநோகராதலிங்கம், இந்திரகுமார் பிரசன்னா, கோவிந்தன் கருணாகரம் ஆகியோர் பங்குபற்றினர்.

இதில் குறிப்பிடத்தக்களவு விட்டுக்கொடுப்புக்களை தமிழரசுக்கட்சி மேற்கொண்டுள்ளது. அதன்படி யாழ்ப்பாண மாவட்டத்தில் இணக்கம் காணப்பட்டுள்ள ஆசனப்பங்கீட்டு விபரம் இதுதான்.

யாழ்ப்பாணம்

நெடுந்தீவு, ஊர்காவற்றுறை, காரைநகர், வல்வெட்டித்துறை நகரசபை என்பன ரெலோவிற்கு வழங்கப்பட்டுள்ளன. வேலணை பிரதேசசபையின் பிரதி தவிசாளரும், அங்கு 40% வேட்பாளர்களும்.

யாழ் மாநகரசபையின் பிரதி மேயர் ரெலொவிற்கு.

நல்லூர் பிரதேசசபை, வலி கிழக்கு, கரவெட்டி தெற்கு மேற்கு பிரதேசசபையும் ரெலோ, தமிழரசுக்கட்சி தலா இரண்டு வருடம் பங்கிடுவார்கள். நல்லூர், கரவெட்டி தெற்கு மேற்கு முதல் இரு வருடம் தமிழரசுக்கட்சிக்கு. இந்த மூன்று சபைகளில் ரெலோ, தமிழரசுக்கட்சி தலா 40%, 20% புளொட்டிற்கு.

இதனடிப்படையில் நோக்குகையில் யாழ்ப்பாண மேயர் பதவி தமிழரசு கட்சியைச் சேர்ந்த தமிழர் ஒருவருக்கும், பிரதிமேயர் பதவி ரெலோ சார்பிலான தமிழர் ஒருவருக்கும் செல்லவுள்ளமை கவனிக்கத்தக்கது.

Previous Post

தேர்தல் சட்டமூலத்தில் குறைபாடுகள் உண்டு, குறைபாடுகளை சுட்டிக்காட்டுங்கள் – ரணில்

Next Post

ஜோதிட நிகழ்ச்சிகளை நடத்தி, மக்களை பிழையாக வழிநடத்த வேண்டாம்

Next Post

ஜோதிட நிகழ்ச்சிகளை நடத்தி, மக்களை பிழையாக வழிநடத்த வேண்டாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures