யாழ் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் பகிடிவதை மற்றும் பாலியல் துன்புறுத்தல் ரீதியான வன்முறைகளுக்கு எதிராக யாழ் பல்கலைக்கழகத்துக்கு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
குறித்த போராட்டம் பெண்கள் அமைப்பினால் இன்று காலை முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாணத்தில் உள்ள மகளிர் அமைப்புகள் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த போராட்டத்தில் உள்ளுராட்சி சபைகளின் பெண் உறுப்பினர்களும், மகளிர் அமைப்புகளும் கலந்து கொண்டனர்.
இதன்போது மகிழ்ச்சியான பல்கலைக்கழக வாழ்க்கையை மரணத்தில் முடிக்காதே, தற்கொலை சிந்தனையை தூண்டும் பகிடிவதை தேவைதானா, மனிதரை மனிதர் மனிதப்பண்பு தான், நாட்டிலும் வீட்டிலும் பெண்கள் சமத்துவத்தைப் பேணுவோம், பாலியல் கல்வி என்பது வாழ்க்கை பாடம் தயக்கத்தை விட்டு கற்றுக்கொள்வோம் என்பன் போன்ற பதாகைகளை ஏந்தியவாறு அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
