இந்திய துணைத் தூதரக தூதுவர் சாய் முரளி, யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் தி.வேல்நம்பியை நேரில் சந்தித்துள்ளார்.
யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (7) துணைத்தூதுவர் சாய் முரளி தலைமையில் தூதரக அதிகாரிகள் அடங்கிய குழுவினர் துணைவேந்தரை சந்தித்தனர்.
இதன்போது வாழ்த்துக்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டதையடுத்து, பல்கலைக்கழகத்தில் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படும் கல்வி மற்றும் அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து இரு தரப்பும் ஆராய்ந்ததாகவும் அது தொடர்பில் கருத்துக்களை பகிர்ந்துகொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.




