கொழும்பிலிருந்து யாழ். நோக்கி பயணித்த சொகுசு பேருந்து விபத்துக்குள்ளாகியதில் ஒருவர் ஸ்தலத்தில் உயிரிழந்ததோடு மூவர் காயமடைந்துள்ளனர்.
குறித்த விபத்து முல்லைத்தீவு- மாங்குளம் பொலிஸ் பிரிவின் பனிங்கங்குளம் ஏ-9 வீதியில் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 4.10 மணிக்கு இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
யாழ். நோக்கி பயணிக்கும் திசையில் தரித்து நின்ற கல் ஏற்றிய டிப்பர் வாகனத்தில், அதி வேகமாக பயணித்த குறித்த பேருந்து மோதியே விபத்து இடம்பெற்றுள்ளது.
காயமடைந்தவர்கள் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் மாங்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.