யாழ்ப்பாணத்தில் இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலை கட்டுப்படுத்த பொலிஸார் நடத்திய துப்பாக்கி சூட்டினால் பதற்ற நிலை ஏற்பட்டது.
சுன்னாகம் பகுதியில் இரு இளைஞர்கள் குழுக்கள் வாள்களுடன் தாக்கிக் கொண்டதை அடுத்து துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.
ஏழாலை மற்றும் குளமன்காடு பகுதிகளைச் சேர்ந்த இளைஞர் குழுக்களே வாள்களுடன் மோதிக் கொண்டனர்.
இந்த அனர்த்தம் காரணமாக இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் மல்லாகத்தைச் சேர்ந்தவர் என்றும் சுமார் 28 வயதுடையவர் என்றும் தெரியவருகின்றது.
உயிரிழந்தவரின் சடலகம் தெல்லிப்பழை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

