Saturday, August 23, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

யாழ் – கொழும்பு விமான சேவை குறித்து வெளியான தகவல்

June 18, 2025
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
வெளிநாடுகளுக்கு சென்றவர்கள் நாட்டுக்குள் வர 13ஆம் திகதி வரை தடை

கொழும்பு (Colombo) – யாழ்ப்பாணம் (Jaffna) இடையே நேரடி உள்நாட்டு விமான சேவையை இயக்குவதற்கு அங்கீகாரம் அளிக்கும் விமான செயற்பாட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த சான்றிதழை இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் டேவிட் பீரிஸ் ஏர்லைன்ஸ் (David Peiris Airlines) நிறுவனத்திற்கு நேற்று (16) வழங்கியுள்ளது.

அதற்கமைய கொழும்பில் உள்ள இரத்மலானை விமான நிலையத்திற்கும் (Ratmalana Airport) யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கும் (Jaffna International Airport) இடையில் நேரடி உள்நாட்டு விமான சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

கிடைத்த அனுமதி 

இதற்காக செஸ்னா-280 விமானம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த விமானப் பயணத்திற்கு 01 மணி நேரம் 10 நிமிடங்கள் எடுக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

யாழ் - கொழும்பு விமான சேவை குறித்து வெளியான தகவல் | Approval For Colombo To Jaffna Flight Service

விமானப்பயணத்திற்கு இருவழி கட்டணமாக 68,000 ரூபா அறவிடப்படுவதுடன் ஏழு கிலோ கிராம் பயணிகள் பொதி அனுமதிக்கப்படும் அதேவேளை 11 பயணிகள் இந்த சேவையின் மூலம் பயணம் செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்நாட்டு பயணிகளுக்கான முனையம் கட்டப்பட்டு வருகிறதுடன், அதன் பணிகள் முடிந்ததும், வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் அங்கிருந்து யாழ்ப்பாணத்திற்கு பயணிக்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

இது வடக்கு மற்றும் மேல் மாகாணங்களுக்கு இடையிலான இணைப்பை மேம்படுத்துவதுடன் வட பிராந்தியத்தில் சுற்றுலாவை அதிகரிப்பதுடன் பொருளாதார மற்றும் பிராந்திய வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புகளைத் திறக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Previous Post

விமல் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம்

Next Post

சஜித் பிரேமதாச தோல்வியின் பிதா | அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

Next Post
மாகாண சபை முறைமை என்பது தாம் வென்றெடுத்த உரிமையென தமிழர்கள் கருதுவதால் அதில் கைவைக்கோம்! – அமைச்சர் சந்திரசேகர்

சஜித் பிரேமதாச தோல்வியின் பிதா | அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures