Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

யாழ்மாநகர சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான பாதீடானது வாக்கெடுப்பு இன்றி நிறைவேற்றம்

December 13, 2018
in News, Politics, World
0

யாழ் மாநகரத்தின் மக்கள் நலன் சார்ந்த வேலைத்திட்டங்களை உள்ளடக்கிய 2019 ஆம் ஆண்டுக்கான பாதீடானது வாக்கெடுப்பு இன்றி உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றம்.

யாழ்ப்பாணம் மாநகரசபையின் 3ஆவது விசேட பொதுக்கூட்டமானது 2018.12.12 காலை 9.30 மணிக்கு மாநகர சபா மண்டபத்தில் மாநகர முதல்வர் கௌரவ இம்மானுவல் ஆனல்ட் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

2019 ஆம் ஆண்டுக்கான பாதீடு தொடர்பில் கடந்த அமர்வில் உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள், திருத்தங்களுடன் சபையில் முதல்வரால் பாதீடு முன்வைக்கப்பட்டது. இன்றய தினம் முன்வைக்கப்பட்ட பாதீட்டில் சில திருத்தங்கள் மற்றும் வகை மாற்றங்கள் உறுப்பினர்கள் சிலரால் முன்வைக்கப்பட்டது. குறித்த வகை மாற்றங்கள் மற்றும் திருத்தங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, முற்றுமுழுதான ஜனநாயக முறையில் கருத்துக்கள் உள்வாங்கப்பட்டு அங்கீகாரத்திற்காக முன்வைக்கப்பட்டபொழுது வாக்கெடுப்பு இன்றி மக்கள் நலன் சார்ந்த வேலைத்திட்டங்களை உள்ளடக்கிய 2019 ஆம் ஆண்டுக்கான இப் பாதீடானது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் மாநகரசபை உறுப்பினர்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து உறுப்பினர்களினதும் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.

இவ்வாறு 2019 ஆம் ஆண்டுக்கான பாதீடானது பெரும்பான்மை உறுப்பினர்களின் அங்கீகாரத்துடன் நிறைவேற்றப்பட்டு யாழ் மாநகரசபையின் 3ஆவது விசேட கூட்டம் 1.15 மணிக்கு நிறைவுற்றது.

Previous Post

கூட்டமைப்பினரை தேடிச் சென்று கைலாகு கொடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய ரணில்!

Next Post

ரணில் விக்கிரமசிங்கவைப் பிரதமராக்குவது தமது நோக்கமல்ல

Next Post

ரணில் விக்கிரமசிங்கவைப் பிரதமராக்குவது தமது நோக்கமல்ல

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures