சுமார் 150 ஊழியர்கள் இவ்வாறு பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
நேற்று இரவு கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு கொண்டு வரப்பட்ட தபால்கள் முறையான சுகாதார விதிகளுக்கு ஏற்றப்படி கொண்டு வரப்படவில்லை என தெரிவித்து குறித்த ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன்காரணமாக தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என தெரிவித்தும், இதனை நாங்கள் விநியோகம் செய்ய மாட்டோம் எனவும் யாழ். தபால் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், குறித்த தபால் பொதிகள் சுகாதார விதிமுறைகளுக்கு ஏற்பட்ட கொடுக்கப்பட்டால் அதனை தாங்கள் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுப்போம் எனவும் தெரிவித்துள்ளனர்.
இன்று காலையில் யாழ். தபால் நிலைய நிர்வாகம் ஊழியர்களை பணியினை செய்யுமாறு பணித்தபோதும் குறித்த தபால்கள் முறையற்ற வகையில் சுகாதார வழிமுறைகளை பின்பற்றாமல் கொண்டு வரப்பட்டிருக்கின்றது. தபால்கள் எடுத்து வந்தவர்களுக்கு கொரோனா தொற்று இருந்தால் இதன் காரணமாக நாங்களும் பாதிக்கப்படுவோம் என தெரிவித்துள்ளனர்.
அத்துடன் யாழ். தபால் நிலையத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு பாதுகாப்பு முகக் கவசங்கள் மற்றும் கையுறைகள் என்பன வழங்கப்படவில்லை எனவும் குறித்த ஊழியர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
இது தொடர்பில் எமது செய்தியாளர் தபாலக நிர்வாகத்தை தொடர்பு கொண்ட போது அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் ஊழியர்களுக்கு பாதுகாப்பு அங்கிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

