2018ஆம் ஆண்டிற்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களுக்கான வாக்களிப்புகள் நடைபெற்று வருகின்ற நிலையில், இதுவரை 30 வீதமான வாக்களிப்புகள் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
காலை 7 மணிக்கு வாக்களிப்பு நடவடிக்கைகள் ஆரம்பமாகிய நிலையில், நான்கு மணிநேரத்திற்குள் 30 வீதமானோர் வாக்களித்துள்ளனர்.
மாலை 4 மணியுடன் வாக்குப்பதிவுகள் நிறைவடையவுள்ளன. அதன்படி ஐந்து மணிநேரங்களே உள்ள நிலையில், இன்னும் 70 வீதமான வாக்குகள் பதிவுசெய்யப்பட வேண்டியுள்ளன.
காலை வேளையில் சற்று மந்தமான நிலையிலேயே வாக்குப்பதிவுகள் இடம்பெற்றுள்ள போதிலும், நான்கு மணிக்குள் பெரும்பாலான மக்கள் வாக்களிப்பில் ஈடுபடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.