யாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ள வன்முறைச் சம்பவங்களை அடுத்து பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தர நாளை யாழ்ப்பாணம் வருகின்றார்.
யாழ்ப்பாணம் தலைமைப் பொலிஸ் நிலையத்தில் அனைத்துப் பொலிஸ் நிலைய உயர் அதிகாரிகளையும் அவர் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.
பொலிஸ் மா அதிபரின் வருகையின் போது உப பொலிஸ் பரிசோதகராக இருந்து உயிரிழந்த சி.தவராசாவின் குடும்பத்துக்கு வீடு ஒன்றும் கையளிக்கப்படவுள்ளது.1995ஆம் ஆண்டு காங்கேசன்துறைப் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றியபோது தவராசா உயிரிழந்திருந்தார்.
வடக்கு மாகாண மூத்த பொலிஸ்மா அதிபர் ரொசாந்த் பிரனந்துவின் ஆலோசனையின் பேரில் தையிட்டியில் இந்த வீடு அமைக்கப்பட்டுள்ளது.

