ஈதுல் அல்ஹா புனித ஹஜ் பெருநாள் தொழுகை யாழில் இரு வேறு இடங்களில் சிறப்பாக நடைபெற்றது. யாழ்ப்பாணம் ஜின்னா மைதானத்தில் முஸ்லிம் வட்டார மக்களுக்கான பெருநாள் தொழுகை ஏற்பாடுகள் மௌலவி அப்துல் அஸீஸ் (காசிமி) தலைமையில் நடைபெற்றது. அத்துடன் யாழ்ப்பாணம் பூங்காவிற்கு முன்னால் இருக்கும் யாழ் மாநகர மைதானத்தில் தௌஹீத் ஜமாத் அமைப்பின் பெருநாள் தொழுகை அஷ்-ஷெய்க் பைசல் (மதனி) தலைமையில் நடைபெற்றது.