சமாதானத்தையும், நல்லிணக்கத்தையும் வலியுறுத்தி யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு நடை பயணம் மேற்கொள்ளப்படுகிறது.
விநாயகமூர்த்தி சகாதேவன் என்பவர் இந்த நடைபயணத்தை மேற்கொள்கின்ற நிலையில், அவருக்கு ஆதரவாக சுமார் 9 இளைஞர்கள் இந்த நடைபயணத்தில் இணைந்துள்ளனர்.
கடந்த 11 ஆம் திகதி மாதகலிலிருந்து கொழும்பு நோக்கி ஆரம்பமான இந்த நடைபயணம் இன்று தம்புள்ளையை வந்தடைந்துள்ளது.

