Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

யாழில் 6 பேருக்கு பரிசோதனை: 50 பேருக்கு தொற்று இல்லை!

April 3, 2020
in News, Politics, World
0

யாழ்ப்பாணத்தில் மேலும் ஆறு பேருக்கு தற்போது பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர்களின் பரிசோதனை முடிவுகள் இன்னும் வெளிவரவில்லை எனவும் யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இதனிடையே, கொரோனோ வைரஸ் அறிகுறி சந்தேகத்தில் நேற்று 6 பேருக்கு மேற்கொண்ட பரிசோதனைகளில் அவர்களுக்குத் தொற்று இல்லை எனபது உறுதிப்படுத்தப்பட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இலங்கையில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்ற கொரோனோ தொற்றுநோய் சந்தேகத்தில் யாழ்.போதனா வைத்தியசாலையிலும் பலர் அனுமதிக்கப்பட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், கொரோனோ சந்தேகத்தில் போதனா வைத்தியசாலையில் மட்டும் அனுமதிக்கப்பட்டு மேற்கொண்ட பரிசோதனைகளில் 50 பேருக்கு கொரோனோ தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டு அவர்கள் மீண்டும் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும் பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வைத்தியசாலைக்கு வெளியே தொற்றுநோய் பரிசோதனை மேற்கொண்ட 10 பேரில் 3 பேருக்குத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை ஏற்கனவே அறவிக்கப்பட்டிருந்தது. அதேநேரம் ஏனைய 7 பேர் தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர்.

அதேபோல சுவிஸ் போதகருடன் நெருங்கிப் பழகியவர்களில் தனிமைப்படுத்தலில் உள்ள 20 பேரில் அடுத்த 10 பேருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் அவர்களின் முடிவுகள் இன்னும் வெளிவரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Previous Post

யாழ்ப்பாண ஊடகங்கள் தொடர்பில் பிரதமர் மகிந்த ராஜபக்ச கடும் விமர்சனம்

Next Post

வைரஸ் பரவலினால் 10 இலட்சம் பேருக்கு மேல் பாதிப்பு

Next Post

வைரஸ் பரவலினால் 10 இலட்சம் பேருக்கு மேல் பாதிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures