வேகக் கட்டுப்பாட்டை இழந்த ஹயஸ், வர்த்தக நிலையத்துக்குள் புகுந்தமையினால் இளைஞர்கள் இருவர் படுகாயமடைந்தனர்.
இந்த விபத்து யாழ்பாணம் பெரியகடை வீதியில் நடந்துள்ளது.
யாழ்ப்பாணம் காங்கேசன்துறையில் இருந்து பயணித்த ஹயஸ் இவ்வாறு விபத்துக்குள்ளானது.
விபத்தில் வர்த்தக நிலையித்தின் முகப்பில் நின்று கொண்டிருந்த இரு இளைஞர்கள் படுகாயமடைந்தனர் என்று தெரிவிக்கப்படுகிறது.

