வாள்வெட்டு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட யாழ். கோண்டாவில் பகுதியை சேர்ந்த நபர் ஒருவருக்கு 14 நாட்கள் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபரை யாழ். நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் மத்திய அரசாங்கத்தின் அரசியல்வாதி ஒருவரின் பின்புலத்தை கொண்ட ஒருவர் எனவும், கடந்த காலங்களில் பொலிஸாரின் அசமந்த போக்கினால் இவர் கைது செய்யப்படவில்லை .
இந்நிலையில், சந்தேநபர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் – கொக்குவில், பிரம்படி பகுதியில் நேற்று முன்தினம் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவம் தொடர்பிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.